6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

போச்சம்பள்ளி அருகே படிக்காமல் இருந்ததை பெற்றோர் கண்டித்ததால் 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2023-01-07 18:45 GMT

காவேரிப்பட்டணம்

போச்சம்பள்ளி அருகே படிக்காமல் இருந்ததை பெற்றோர் கண்டித்ததால் 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.

6-ம் வகுப்பு மாணவன்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குடிமேனஅள்ளி கட்டகாலன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் லோகேஷ் (வயது 11). சிறுவன் அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளியை விட்டு வந்த லோகேஷ் படிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த லோகேஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். வெளியில் சென்று இருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்