கூலித்தொழிலாளி தற்கொலை

Update: 2023-01-06 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் நடூர் கிராமத்தை சேர்ந்தவர் மாது (வயது 44). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தமயந்தி. தொழிலாளி மாதுவுக்கு கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் மாது, வீட்டில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி மாது இறந்தார். இந்த தற்கொலை குறித்து பாபிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்