தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா இருதுகோட்டையை சேர்ந்தவர் மல்லப்பா (வயது 49). டேங்க் ஆபரேட்டர். இவருக்கு 2 மனைவிகள் உண்டு. முதல் மனைவி குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். மல்லப்பா 2-வது மனைவியுடன் இருந்து வந்தார். மல்லப்பாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், 2-வது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மல்லப்பா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்