செல்போன் பயன்படுத்துவதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை

கூடலூர் அருகே செல்போன் பயன்படுத்துவதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்துகொண்டனர்.

Update: 2022-12-07 16:58 GMT

கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). மளிகை கடைக்காரர். இவரது மனைவி லட்சுமி (48). இந்தநிலையில் முருகன் மளிகை கடையில் வியாபாரம் செய்யாமல் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி கண்டித்தார்.

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முருகன், கடந்த 5-ந்தேதி விஷத்தை குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்