கள்ளக்காதலி வீட்டில் கட்டிட தொழிலாளி தற்கொலை
சிங்காரப்பேட்டை அருகே கள்ளக்காதலி வீட்டில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை அருகே கள்ளக்காதலி வீட்டில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிட தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 32). கட்டிட தொழிலாளி. திருமணம் ஆனவர். இவருக்கும், சிங்காரப்பேட்டை அருகே உள்ள குப்பநத்தம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துவந்துள்ளது.
இதனிடையே அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த செல்வம், கடந்த 13-ந் தேதி கள்ளக்காதலியான அந்த பெண்ணின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காரப்பேட்டைபோலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கள்ளக்காதலி வீட்டில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.