ஓசூர்:
ஓசூர் ஜெய்சங்கர் காலனியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி பத்மாவதி (வயது 54). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த பத்மாவதி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.