மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

ஜேடர்பாளையம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-27 15:51 GMT

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கருத்து வேறுபாடு

பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் யுவராஜ் (வயது 29). எலக்ட்ரீசியன். இவருக்கும், பிரியா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையே இருவரும் அவ்வப்போது ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது மனைவி பிரியா மீண்டும் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது.

விசாரணை

இதனால் மனமுடைந்த யுவராஜ் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெகு நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அவரது தாய் பேபி வீட்டிற்கு சென்று பார்த்தார்.

அப்போது யுவராஜ் வீட்டில் மின்விசிறியில் உள்ள கொக்கியில் கயிற்றால் தூக்குப்போட்டு செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார். பின்னர் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் யுவராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்