திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை-உதவி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

ஓசூரில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2022-08-22 15:54 GMT

ஓசூர்:

புதுப்பெண்

ஓசூர் மூக்கண்டப்பள்ளி அரசனட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி ஐஸ்வர்யா (வயது 18). இவர்களுக்கு கடந்த 6.4.2022 அன்று திருமணம் நடந்தது. ஐஸ்வர்யா கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனிவாசபுரா தாலுகா பங்காவதி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்தநிலையில் ஐஸ்வர்யாவின் தாய் அனிதா, தனது கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு வருமாறு அவரை அழைத்தார். அதற்கு ஐஸ்வர்யாவின் கணவர் அவரை போக வேண்டாம் என கூறியதாக தெரிகிறது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா, அரசனட்டியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், திருமணமாகி 4 மாதங்களில் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதால், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்