மத்திகிரி அருகே பெண் தற்கொலை
மத்திகிரி அருகே பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மத்திகிரி:
தேன்கனிக்கோட்டை தாலுகா எம்.அக்ரஹாரத்தை சேர்ந்தவர் லோகேஷ் ரெட்டி. இவருடைய மனைவி வசந்தா (வயது 35). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மன வேதனையில் மத்திகிரி அருகே குமாரனப்பள்ளியில் உள்ள தனது தாய் வீட்டில், நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.