பியூட்டி பார்லர் ஊழியர் தற்கொலை

தர்மபுரியில் பியூட்டி பார்லர் ஊழியர் தற்கொலை

Update: 2022-07-06 16:28 GMT

தர்மபுரி ஏ.கொல்லஅள்ளியை சேர்ந்தவர் சுபா (வயது 38). பியூட்டி பார்லர் ஊழியரான இவருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனர். இவருடைய கணவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இவரை பிரிந்து சென்று விட்டார். சுபா கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுபா வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இந்த தற்கொலை தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்