பாகலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பாகலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
பாகலூர் அருகே உள்ள தாசரப்பள்ளியை சேர்ந்தவர் ஹரிகரன். இவரது மனைவி பவ்யஜோதி (வயது 33). இவர்களுக்கு 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே குடும்ப பிரச்சினை காரணமாக பவ்யஜோதி, கடந்த 17-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமாகி 2½ ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் விசாரணை நடத்திவருகிறார்.