காரிமங்கலம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காரிமங்கலம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-12 16:45 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே உள்ள அடிலம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி மீனா (வயது 28). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மீனா ஏற்கனவே இருந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்