சங்ககிரி அருகேகல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சங்ககிரி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-09 20:42 GMT

சங்ககிரி

சங்ககிரி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி

சங்ககிரி அருகே ஓலப்பட்டியானூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி ஷீலா. இவர்களுக்கு பிலோமி, செல்ஷியா பிரவீனா (19) என்ற 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர்.

இளைய மகள், செல்ஷியா பிரவீனா திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை 7.45 மணியளவில் தாயார் ஷீலாவும், அவருடைய மகனும் வெப்படை நூல் மில்லுக்கு வேலைக்கு சென்றனர்.

தற்கொலை

அப்போது கல்லூரி செல்ல நேரமாகி விட்டது என்று கூறி செல்ஷியா பிரவீனா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் மாணவி செல்ஷியா பிரவீனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சங்ககிரி போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்