ஓசூர்:
ஓசூர் காந்தி நகரை சேர்ந்தவர் தனபால் (வயது 38). டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் பிரச்சினையால் மனவேதனை அடைந்த அவர் கடந்த 29-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.