பர்கூர்:
கந்திகுப்பம் அருகே உள்ள மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணமாகாத இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ராஜ்குமார் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.