பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே உள்ள பூச்செட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 80). இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முனியம்மாள் தனது மகன் முனியப்பன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் மூதாட்டி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முனியம்மாளின் உடலை சுடுகாட்டில் புதைக்கக் கூடாது என்று உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி முனியம்மாளின் உடலை வேறு மயானத்தில் எரித்து அஸ்தியை உறவினர்கள் பயன்படுத்தும் சுடுகாட்டில் புதைத்தது குறிப்பிடத்தக்கது.