கடத்தூர் அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-08-09 19:45 GMT

மொரப்பூர்

கடத்தூர் அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது29). இவருக்கும், பில்பருத்தி சத்யா நகரை சேர்ந்தவர் உமாராணி (25) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 10 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அஜித்குமார் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் உமாராணி கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அஜித்குமார் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து பெற்றோர் உமாராணியை சமாதானம் செய்து கணவருடன் அனுப்பி வைத்துள்ளனர். கணவர் வீட்டுக்கு சென்ற உமாராணி நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்