மகராஜகடை அருகேபூக்கடை ஊழியர் தற்கொலை

Update: 2023-07-11 19:45 GMT

குருபரப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவடடம் மகராஜகடை அருகே உள்ள பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 55). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு பூக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். உடல்நலக்குறைவால் ஊருக்கு வந்திருந்த தேவராஜ் இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்