சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையின் கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையின் கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-03 18:45 GMT


சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சேத்தியாத்தோப்பு கரும்பு கோட்டம் சார்பில் வட்டத்தூரில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கரும்பு அலுவலர் ராஜதுரை தலைமை தாங்கினார். கரும்பு பெருக்கு உதவியாளர்கள் வெங்கடசுப்புராமன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை கரும்பு அலுவலர் ரவி கிருஷ்ணன், கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் தங்கேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு வட்டத்தூர் கிராமத்தில் கரும்பில் நுனி குருத்து அழுகல் மற்றும் குருத்து நோய் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து, கரும்பை நோயில் இருந்து பாதுகாப்பாது குறித்தும் விளக்கி பேசினார்கள்.

இதில் கரும்பு விவசாயிகள் கலியமூர்த்தி, ஜெயமணி, வேல்முருகன், கோவிந்தராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் எழில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கரும்பு உதவியாளர் சூசை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்