தூத்துக்குடியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

தூத்துக்குடி தாளமுத்துநகரில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-23 11:00 GMT

தூத்துக்குடி தாளமுத்துநகரில் நேற்று பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலி

தூத்துக்குடி தாளமுத்துநகரில் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்துக்கு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை மாநகராட்சி சார்பில் வேலி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை அறிந்த பள்ளிக்கூட நிர்வாகத்தினர் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஏற்கனவே கேட்டு மனு கொடுத்து இருந்தோம். மாணவ, மாணவிகளின் நலன் கருதி அந்த நிலத்தை தவிர மற்ற இடத்தில் வேலி போடுமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர்.

சாலை மறியல்

இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் பள்ளிக்கூடத்துக்கு ஆதரவாக தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

22 பேர் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால், போலீசார் மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 22 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்