ராமநாதபுரத்தில் திடீர் மழை

ராமநாதபுரத்தில் திடீர் மழை பெய்தது.

Update: 2022-06-19 17:57 GMT


ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு கத்தரி வெயில் சமயத்தில் கடந்த காலங்களை விட அதிகளவில் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. வழக்கமாக கத்தரி வெயில் சமயத்தில் மழை பெய்யும் நிலையில் இந்த ஆண்டு மழை பெய்யவில்லை. இதனால் மக்கள் அவதி அடைந்தனர். இந்நிலையில் கத்தரி வெயில் முடிவுக்கு வந்த பின்னரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாத வகையில் சுட்டெரிக்கும் வெயில் பலத்த அனல் காற்றுடன் வீசியது. தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் காலை முதல் வழக்கமான வெயில் அடித்து வந்த நிலையில் திடீரென்று வானில் கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக விட்டு விட்டு மழை கொட்டியது. இதனால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தில் சிக்கியிருந்த மக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்