கந்தம்பாளையம் பகுதியில் திடீர் மழை
கந்தம்பாளையம் பகுதியில் திடீர் மழை பெய்தது.
தவுட்டுப்பாளையம், பாலத்துறை, கந்தம்பாளையம், கூலக்கவுண்டனூர், அண்ணா நகர், காந்தி நகர், காகிதபுரம், கொங்கு நகர்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 2.30 மணியில் இருந்து பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோர வியாபாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.