சென்னையில் திடீரென பெய்த மழை...!

சென்னையில் திடீரென மழை பெய்து வருகிறது.

Update: 2022-09-19 14:51 GMT

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக , தமிழ்நாடு, புதுவை, காரக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னையில் தற்போது திடீரென ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், கொடுங்கையூர், கொளத்தூர் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். 

Tags:    

மேலும் செய்திகள்