குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் திடீர் தீ

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் திடீரென தீப்பிடித்தது.

Update: 2022-05-24 18:52 GMT

விருதுநகர், 

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் உள்ள மின் இணைப்பு பெட்டியில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து புகை கிளம்பியது. இதனால் குழந்தைகள் நல பிரிவில் சிகிச்சையில் இருந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் பதற்றமடைந்து வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் மின்ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் இணைப்பு பெட்டியை ஆய்வு செய்தனர். அப்போது வேறு ஏதும் பாதிப்பு இல்லை என தெரியவந்ததால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் சிகிச்சை பிரிவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதுபற்றி மருத்துவக்கல்லூரி டீன் சங்குமணி கூறியதாவது:-நேற்று மாலை திடீரென மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்ட நிலையில் ஜெனரேட்டர் பயன்பாட்டிற்கு வந்தது. அப்போது திடீரென மின் இணைப்பு பெட்டியில் லேசான தீப்பொறி பறந்து புகை கிளம்பியது. இதனை கண்டு குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் இருந்த தாய்மார்கள் பதற்றமடைந்து குழந்தைகளுடன் வெளியேறினர். ஆனால் உடனடியாக அரசு டாக்டர்கள் குழு மற்றும் மின் ஊழியர்கள் ஆய்வு செய்ததில் பாதிப்புஏதும் ஏற்படவில்லை என்று தெரிந்தவுடன் அவர்கள் மீண்டும் குழந்தைகளுடன் சிகிச்சை பிரிவிற்குள் வந்தனர்.இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.


Tags:    

மேலும் செய்திகள்