சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
கரியாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென இறந்தார்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் பங்களாத்தெருவை சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் சுப்பிரமணியன் (வயது 58). இவர் கரியாலூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை சங்கராபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து ஒரு வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு செல்ல புறப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுப்பிரமணியன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் சக போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.