கட்டிட தொழிலாளி திடீர் சாவு

ராமநாதபுரம் அருகே கட்டிட தொழிலாளி திடீரென்று இறந்தார்.

Update: 2022-11-04 18:45 GMT


ராமநாதபுரம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார். இவருடைய மகன் ஆகாஷ் (வயது24). கட்டிட தொழிலாளி.. தினமும் இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு அந்த பகுதியில் உள்ள பழைய சமுதாயக்கூடத்தில் அவரது நண்பர்களுடன் இரவு தூங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு சமுதாயக் கூடத்திற்கு சென்றவர் காலையில் வீட்டிற்கு வரவில்லையாம். அப்போது அந்த வழியாக சென்ற உறவினர்கள் ஆகாஷ் சமுதாய கூட பகுதியில் விழுந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்சில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ஆகாஷ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து சசிக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்