விருத்தாசலம் பஸ் நிலையத்தில் வியாபாரி திடீர் சாவு

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் வியாபாரி திடீரென உயிாிழந்தாா்.;

Update:2023-10-26 00:15 IST

விருத்தாசலம், 

திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்தவர் முகமது சாதிக் (வயது 52). இவர் கடந்த 2 ஆண்டுகளாக நெய்வேலி பெரியாக்குறிச்சி பள்ளிவாசல் தெருவில் வசித்து வருகிறார். மேலும் முகமது சாதிக் திண்டுக்கல்லில் ஏலக்காய் வியாபாரமும் செய்து வந்தார். நேற்று முன்தினம் முகமது சாதிக் திண்டுக்கல் சென்று விட்டு நெய்வேலி வருவதற்காக விருத்தாசலம் பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது அவா் திடீரென மயங்கி விழுந்தாா்.

உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முகமது சாதிக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்