இரு தரப்பினர் இடையே திடீர் மோதல்; 10 பேர் காயம்

திருச்சி உறையூரில் இருதரப்பினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர். போலீஸ் நிலையம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-01 19:35 GMT

திருச்சி,

திருச்சி உறையூரில் இருதரப்பினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர். போலீஸ் நிலையம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மோதல்

திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் அருகே நேற்று இரவு மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து தொடர்பாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இது குறித்து இரு தரப்பை சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் பரவியது. உடனே இருதரப்பினரும் திரண்டு சென்று உருட்டுக்கட்டைகளால் தாக்கி மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

பரபரப்பு

தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதற்கிடையே இருதரப்பை சேர்ந்தவர்களும் புகார் அளிக்க உறையூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அப்போது அங்கு அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீஸ் நிலையம் முன்பு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். உடனே போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மோதல் சம்பவம் குறித்து உறையூர் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்