கால்நடை வளர்ப்பு, தீவன உற்பத்திக்கு மானியம்
கால்நடை வளர்ப்புமற்றும் தீவன உற்பத்திக்கு மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கால்நடை வளர்ப்புமற்றும் தீவன உற்பத்திக்கு மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரூ.50 லட்சம் மானியம்
மத்திய அரசு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கால்நடை இயக்கம்த்தின் கீழ் 2021-22-ம் ஆண்டு முதல் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோழி வளர்க்க முனைவோர் 1,000 நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்து, கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து 4 வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில் 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
வெள்ளாடு அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க 500 பெண் ஆடுகள் மற்றும் 25 கிடா கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில் 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியம் 2 தவணைகளில் வழங்கப்படும். பன்றி பண்ணை அமைக்க மொத்த திட்ட செலவில் 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக ஒராண்டில் 2000 முதல் 2400 மெட்ரிக் டன் வைக்கோல், ஊறுகாய் புல் ஒரு நாளில் 30 மெட்ரிக் டன் மொத்த கலப்பு தீவனம், தீவன கட்டி தயாரித்தல் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ள தளவாடங்கள் வாங்க மொத்த திட்ட செலவில் 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.50 வட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்
இத்திட்டத்தின் கீழ் தனி நபர், சுய உதவி குழுக்கள், விவாசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, கூட்டு பொறுப்பு சங்கங்கள் ஆகியவை தகுதியானவர்கள் ஆவர். சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும். திட்டத்திற்கான வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதம், திட்ட மதிப்பீட்டிறக்கான அங்கீகாரம் பெற வேண்டும்.
பயன்பெற விரும்பும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் https:nimudyamimitra.in என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். திட்டம் தொடர்பான முழு தகவல்களை http://nim.udyamimitra.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்கள் அறிய தங்கள் அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்கள் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம், பயிற்சி மையம், வேலூர் என்ற முகவரியினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.