அண்ணா பிறந்த நாளையொட்டி படத்துக்கு மாலை அணிவிக்க சு.ரவி எம்.எல்.ஏ.அறிக்கை

அண்ணா பிறந்த நாளையொட்டி படத்துக்கு மாலை அணிவிக்க சு.ரவி எம்.எல்.ஏ.கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2022-09-12 19:04 GMT


அண்ணா பிறந்த நாளையொட்டி படத்துக்கு மாலை அணிவிக்க சு.ரவி எம்.எல்.ஏ.கேட்டுக்கொண்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் துணை கொறாடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த தின விழா வருகிற 15-ந் ேததி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை அ.தி.மு.க.இடைக்கால பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி. கே.பழனிசாமி ஆணைக்கிணங்க ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் அ.தி.மு.க. செயலாளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சி, வார்டு, கிளை கழகங்களிலும், அந்தந்த பகுதியை சேர்ந்த கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிகளுடன் சேர்ந்து அண்ணாவின் படம் வைத்து, மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி சிறப்பான முறையில் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநில. மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பிற அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்