பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் ஆய்வு

பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் ஆய்வு செய்யப்பட்டது.

Update: 2022-09-23 18:45 GMT

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட முத்துநகர், பெரம்பலூர் கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் உள்ள 3 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் முதற்கட்டமாக முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 112 மாணவ-மாணவிகள் அந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். அந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேற்று காலை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அந்த பள்ளி வளாகத்தில் உள்ள மைய சமையல் அறை கூடத்தில் தயார் செய்யப்படும் உணவு சரியான நேரத்தில் பள்ளிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறதா? என்பது குறித்தும், உணவின் தரம் மற்றும் சுவை குறித்தும் ஆய்வு செய்தார்கள். ஆய்வின் போது பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மனோகரன் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்