உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் ஆய்வு

செஞ்சி பகுதி வரலாற்று நினைவிடங்களை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் ஆய்வு

Update: 2023-06-04 18:45 GMT

செஞ்சி

சென்னை தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் சுமார் 150 பேர் செஞ்சி பகுதியில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் வரலாற்று நினைவிடங்களை ஆய்வு செய்தனர். முன்னதாக செஞ்சி அருகே உள்ள ஜெயினர்களின் நினைவிடமான திருநாதங்குன்று, நெகனூர், பட்டி ஆகிய இடங்களை ஆய்வு செய்த அவர்கள் செஞ்சிக்கோட்டை, செஞ்சி அருகே உள்ள வெடால், தொண்டூர், சீயமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்வெட்டுகள், வரலாற்று நினைவிடங்களையும் ஆய்வு செய்தனர். பேராசிரியர்கள் முனைவர் வசந்தி, ஜீவா, தமிழரசு ஆகியோர் கல்வெட்டுகள், நினைவிடங்களை மாணவர்களுக்கு விளக்கி கூறினார்கள். அப்போது அகிம்சை நடை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன், சேட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்