மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி - கலெக்டர் உமா ஆய்வு

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.

Update: 2023-06-14 18:45 GMT

நாமக்கல் நகராட்சி பூங்கா சாலையில் நகராட்சி பொது நிதியின் மூலம் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை கலெக்டர் உமா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கமலாலய குளத்தில் நாணல் புற்கள் வளர்ந்து உள்ளதை அகற்றும் பணி நடைபெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஆர்.பி.புதூர் குட்டை தெருவில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை தூர்வாரி மழைக்காலங்களில் மழைநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் கொசவம்பட்டி ஏரியில் கால்வாய் தூர்வாரும் பணியினை கலெக்டர் பார்வையிட்டு மழைக்காலங்களில் மழைநீர் வடிந்து செல்ல ஏதுவாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் நாமக்கல் உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், உழவர் சந்தையினை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது நாமக்கல் நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் சுகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்