நாமக்கல்லில் சாலை பணிகளை அதிகாரி ஆய்வு

Update: 2023-06-08 18:45 GMT

நாமக்கல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட சாலைகளில் திட்டம் மற்றும் திட்டம் சாரா பணிகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்ற சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை சேலம் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சாலையின் தரம் குறித்து, அவர் பரிசோதனை செய்தார்.

இந்த ஆய்வில் கோட்டப் பொறியாளர் குணா, உதவிக் கோட்டப் பொறியாளர் அசோக்குமார் மற்றும் உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பரமத்தி நெடுஞ்சாலைத்துறை பிரிவிற்கு உட்பட்ட சாலைகளில் கண்காணிப்புப் பொறியாளர் பன்னீர்செல்வம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்