மழை நீர் புகுந்த பகுதியில் எம்.எல்.ஏ. ஆய்வு
ஊத்தங்கரை அண்ணா நகரில் மழை நீர் புகுந்த பகுதியில் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை பரசன் ஏரிக்கரை அருகே உள்ள அண்ணாநகர், ஜீவா நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. மழைநீர் புகுந்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். தொடர்ந்து அங்குள்ள ஏரியை அவர் பார்வையிட்டார். அவருடன் ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன், மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் அமீது, நகர செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.