செங்கல் சூளைகளில்தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-10-06 18:58 GMT

கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் குப்பனூர், ஆச்சான்குட்டப்பட்டி, வலசையூர், சுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது செங்கல் சூளைகளில் பணிபுரியும் நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கொத்தடிமை தொழிலாளர் யாரும் பணியில் இல்லை என்பது தெரிய வந்தது.

மேலும் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது குற்றமாகும். கொத்தடிமைகளாக பணி அமர்த்தும் நிறுவன உரிமையாளர்களுக்கு கோர்ட்டு மூலம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்