மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகம் வழங்கப்பட்டது

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Update: 2022-10-10 18:55 GMT

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பள்ளிகள் மீண்டும் திறப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டது. பள்ளிக்கூடம் திறந்த அன்றே அடுத்த பருவத்திற்கான பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் காலாண்டு தேர்வு முடிந்து மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் 2-ம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை வழங்கினர். நெல்லை டவுன் ஜவகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாடப்புத்தகங்களை தலைமை ஆசிரியர் மாலா மற்றும் ஆசிரியர்கள் வழங்கினர். இதேபோன்று அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த 'எண்ணும் எழுத்தும்' என்ற கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் மூலமும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு 2-ம் கட்ட 'எண்ணும் எழுத்தும்' கல்வி திட்ட பயிற்சி முகாம், நெல்லை டவுன் கல்லணை தொடக்கப்பள்ளியில் நேற்று நடந்தது இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்