பட்டப்படிப்பு படிக்கும் போதே மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும்

பட்டப்படிப்பு படிக்கும் போதே மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று சிவகாசியில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் மேகநாதரெட்டி பேசினார்.

Update: 2023-01-04 19:19 GMT

சிவகாசி, 

பட்டப்படிப்பு படிக்கும் போதே மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று சிவகாசியில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் மேகநாதரெட்டி பேசினார்.

கருத்தரங்கம்

சிவகாசி எஸ்.எப்.ஆர். கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் மேகநாதரெட்டி பேசியதாவது:-

மாணவர்கள் கல்லூரி படிக்கும் போதே ஒரு தெளிவான நோக்கத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் இலக்கை நோக்கி நகர்வதற்கு எளிதாக இருக்கும். கல்லூரிகளில் படிக்கும் போதே போட்டி தேர்வுகளுக்கு உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். வெற்றி, தோல்விகளை பற்றி கவலைப்படாமல் அதிக அளவில் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கையேடு

முன்னதாக போட்டி தேர்வுகளுக்கு தேவைப்படும் புத்தகங்களின் கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்தார். மாணவர்கள் பயன் பெறும் வகையில் வழிகாட்டி கையேட்டினை கலெக்டர் வெளியிட்டார். பின்னர் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குனர் (வேலை வாய்ப்பு) மகாலட்சுமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலைய உதவி இயக்குனர் ஹரிபாஸ்கர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஞானபிரபா, பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்