தேர்வு முடிவுகள் பற்றி மாணவ-மாணவிகள் கவலைப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தேர்வு முடிவுகள் பற்றி மாணவ-மாணவிகள் கவலைப்பட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

Update: 2023-05-08 02:00 GMT

திருச்சி,

திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு (இன்று) வெளியாகிறது. மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகள் பற்றி கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உரிய துறைகளை தேர்வு செய்து படிக்க, நான் முதல்வன் திட்டம் மூலம் அறிந்து பயன்பெற வேண்டும்.

திராவிட மாடல் அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்து 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டில் உறுதிமொழி ஆண்டாக கால் பதிக்கிறது. தமிழகம் முழுவதும் 1,222 இடங்களில் சாதனை விளக்க, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நாங்கள் அனைத்தும் செய்து முடிக்கவில்லை. செய்ய வேண்டியது நிறைய உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்