சமூகவலைத்தளங்களில் மாணவ-மாணவிகள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்

சமூகவலைத்தளங்களில் மாணவ-மாணவிகள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தேசிய போலீஸ் அகாடமி இயக்குனர் ஏ.சேர்மராஜன் அறிவுறுத்தினார்.

Update: 2022-12-03 18:45 GMT

கோவை

சமூகவலைத்தளங்களில் மாணவ-மாணவிகள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தேசிய போலீஸ் அகாடமி இயக்குனர் ஏ.சேர்மராஜன் அறிவுறுத்தினார்.

கலந்துரையாடல்

கோவை தனியார் கல்லூரியில் பேஸ் டூ பேஸ் என்ற கலந்துரை யாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனர் ஏ.சேர்மராஜன் என்ற ஏ.எஸ்.ராஜன் பேசியதாவது:-

சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்கள் அனைத்து உண்மையாக இருக்காது. அதில் தவறான தகவல்களும் இருக்கலாம். எனவே எல்லா தகவல்களையும் பகிர வேண்டாம். சமூக வலைத்தளங்களை அறிவை வளா்த்துக்கொள்ள மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமூகவலைத் தளங்களில் நேரத்தை வீணடிக்க கூடாது.

படிப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். வாழ்வில் உயர்ந்த நிலையை மாணவர்கள் அடைய வேண்டும். வாழ்வில் எந்த பிரச்சினை வந்தாலும் அதை முறியடித்து குதிரையை போன்று சீறிப்பாய்ந்து முன்னோக்கி செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேவை மனப்பான்மை

கல்வித்துறை, மருத்துவத்துறை போன்று காவல்துறையும் சேவை மனப்பான்மையுடன் உள்ளது. காவல்துறையில் பெண்களின் பங்கு 20 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதில் தமிழகத்தின் பங்கு அதிகம். நீதி துறையின் முதல்கட்டமே காவல் துறைதான். இதில் விருப்பு வெறுப்பு இல்லாமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும். பிற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் வருவது குறைந்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கு முயற்சிப்பவர்களிடம் கலந்துரையாடல் குறைந்து விட்டது.

ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு தொழில் நுட்பங்கள், சைபர் கிரைம் குற்றங்களை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப் படுகிறது. காவல் துறையில் பணியாற்றியவா்கள், ஐ.பி.எஸ். அதிகாரி கள், ஊடகத்துறையினர், நீதித்துறை, தன்னார்வலர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணி முறைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்