25 அடி உயரத்துக்கு அன்னை தெரசா ஓவியம் வரைந்த மாணவ-மாணவிகள்
அன்னை தெரசா நினைவு தினத்தையொட்டி அவரது ஓவியத்தை 25 அடி உயரத்துக்கு மாணவ-மாணவிகள் வரைந்தனர்.
அன்னை தெரசாவின் 25-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில், அன்னை தெரசா பொது நல அறக்கட்டளை சார்பில் சிவராம் கலைகூட மாணவ- மாணவிகள் 25 அடி உயரத்துக்கு அன்னை தெரசா ஓவியத்தை வரைந்தனர். டாக்டர் பன்னீர் செல்வன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மாரி முன்னிலை வகித்தார். ஓவிய ஆசிரியர் கணேசன், தமிழ் ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முடிவில், அறக்கட்டளை இயக்குனர் மகேஷ் நன்றி கூறினார்.