பிறந்தநாளில் புத்தகங்கள் வழங்கும் மாணவர்கள்

கூடலூர் அரசு பள்ளியில் பிறந்தநாளில் மாணவர்கள் புத்தகங்களை வழங்கி வருகின்றனர்.

Update: 2023-04-26 18:45 GMT

கூடலூர்,

கூடலூர் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் 1,700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியில் உள்ள நூலகத்தில் மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு முதல் பள்ளி மாணவர்கள் தங்கள் பிறந்த நாளில் இனிப்புகள் வழங்குவதற்கு பதிலாக புத்தகங்கள் வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் தங்கள் பிறந்த நாளில் பள்ளிக்கூடத்தில் உள்ள நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கி வருகின்றனர். இதுவரை நூலகத்துக்கு புதிதாக 150 புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்களும் நூலகத்தில் உள்ள புத்தகங்களை வீடுகளுக்கு எடுத்து சென்று படித்து பயனடைந்து வருகின்றனர். இதுதவிர வகுப்பு வாரியாக வாரத்தில் ஒரு நாள் 45 நிமிடங்கள் நூலகத்தில் மாணவர்கள் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். இதுகுறித்து தலைமை ஆசிரியர் அய்யப்பன் கூறும்போது, நூல்களின் முக்கியத்துவம் மற்றும் வாசிக்கும் திறனை மேம்படுத்த விருப்பமுள்ள மாணவர்களிடம் இருந்து பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் பிறந்த நாளில் பெறப்படுகிறது. இது அவர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கிறது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்