திருப்பரங்குன்றம் அருகே பள்ளியில் மாதிரி நாடாளுமன்ற தேர்தல்-வாக்களித்து அமைச்சரவையை மாணவர்கள் தேர்வு செய்தனர்

திருப்பரங்குன்றம் அருகே பள்ளியில் மாதிரி நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து அமைச்சரவையை மாணவர்கள் தேர்வு செய்தனர்

Update: 2023-06-26 21:59 GMT

திருப்பரங்குன்றம்

மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும் நோக்கத்திலும், இந்திய நாடாளுமன்ற அமைப்பு முறையை தெரிந்து கொள்ளும் வகையிலும் மாணவர்களிடையே மாதிரி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு அமைச்சரவை அமைக்கும் நிகழ்ச்சி திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தலைமை தேர்தல் அதிகாரியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.ஆனந்த் தேர்தலை நடத்தினார். வாக்குசாவடி மையமாக பள்ளியின் 3 அறைகள் ஒதுக்கப்பட்டு ஓட்டுபெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது.

தேர்தலில் பிரதமர் பதவி, துணை பிரதமர் பதவிக்கு மாணவர்கள் போட்டியிட்டனர். பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வாக்குபதிவு நடந்தது. அதில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆசிரியைகள் 53 பேரில் 51 பேரும், 1233 மாணவர்களில் 1203 பேருமாக 1254 பேர் வாக்களித்தனர். பிரதமர், துணை பிரதமர் உரிய ஓட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு தலைமை ஆசிரியர் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாலையில் ஒட்டு எண்ணிக்கை நடந்தது. மாணவர்களின் பிரதமராக எஸ் வசந்தகுமார் 648 ஓட்டுக்கள் பெற்று வெற்றிபெற்றார். துணை பிரதமராக எம்.சபரி 524 ஒட்டு பெற்றுவெற்றிபெற்றார். தேர்தலில் போட்டியிட்ட மாணவர்களுக்கு ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் இலாகா ஒதுக்கப்பட்டு மந்திரி பதவி வழங்கப்பட்டது. பிரதமர் துணை பிரதமர் மற்றும் மந்திரியான மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்