தேசிய கொடியை அசைத்து கொண்டாடிய மாணவர்கள்

விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1 விண்கலத்தின் வெற்றியை தேசிய கோடியை அசைத்து மாணவர்கள் கொண்டாடினர்.

Update: 2023-09-02 23:45 GMT

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை வடிவமைத்து உள்ளது. இந்த விண்கலம் நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. இதற்கிடையே விண்கலம் விண்ணில் பாய்ந்த காட்சிகள் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் வான் இயற்பியல் ஆய்வகத்தில் திரையிட்டு காட்டப்பட்டது.

இதில் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு ஆதித்யா விண்கலம் விண்ணில் பாய்ந்து சூரியனில் ஏற்படும் மாற்றங்களை புகைப்படம் எடுப்பதுடன் அதனை ஆராய இருப்பதாகவும் பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். மேலும் ஆதித்யா எல்-1 விண்கலம் போன்று வடிவமைக்கப்பட்ட கேக்கினை விஞ்ஞானிகள் காட்சிப்படுத்தியிருந்தனர். மாணவர்கள் அந்த கேக்கை வெட்டியும், தேசிய கொடியை கையில் ஏந்தி அசைத்தும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை முதன்மை விஞ்ஞானி எபினேசர் உள்பட பலர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்