தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 6-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

Update: 2023-06-01 19:36 GMT

மாணவர் சேர்க்கை

2023-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான கல்வித்தகுதி 8-ம் வகுப்பு அல்லது எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆகும்.

6-ந்தேதி கடைசி நாள்

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 6-ந் தேதியாகும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 9499055877 (அரியலூர்), 9499055879 ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்