தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 7-ந்தேதி கடைசி நாளாகும்.

Update: 2023-06-01 17:55 GMT

தொழிற்பயிற்சி நிலையங்கள்

2023-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் கரூர் வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலத்தில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

7-ந்தேதி கடைசிநாள்

கல்வித்தகுதி 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 7-ந்தேதி ஆகும். விண்ணப்பக் கட்டண தொகையான ரூ.50, விண்ணப்பதாரர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங், யுபிஐ வாயிலாக செலுத்தலாம்.

மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் பட்சத்தில் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மாணவர்கள் பயன் பெறலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்