கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க 7-ந்தேதி கடைசி நாளாகும்.
விண்ணப்பிக்கலாம்
கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் https://skilltraining.tn.gov.in/DET என்ற இணைய தளம் மூலமாக சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதியாகும். சேர்க்கைக்கு கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்தும் விண்ணப்பித்து கொள்ளலாம்.
கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளில் தையல் தொழில்நுட்ப பயிற்சியில் சேர 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலம் 1 ஆண்டு (மகளிர் மட்டும்). கணினி தொழில்நுட்ப பயிற்சியில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலம் 1 ஆண்டு (மகளிர் மட்டும்).
மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் பயிற்சியில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலம் 1 ஆண்டு (ஆண், பெண் இருபாலரும் சேரலாம்). ஆபரேட்டர் அட்வான்ஸ்டு மெஷின் டூல்ஸ் படிப்பில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலம் 2 ஆண்டு (ஆண், பெண் இருபாலரும் சேரலாம்).
கூடுதல் விவரங்கள்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, இலவச பஸ் கட்டண சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் அரசால் வழங்கப்படும்.
மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரில் தொடர்பு கொண்டோ தெரிந்து கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.