ஆத்தூர் அருகே மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.அனுப்பிய பேராசிரியருக்கு தர்ம-அடி- கல்லூரி வளாகத்திலேயே மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு

ஆத்தூர் அருகே மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய பேராசிரியருக்கு அடி- உதை விழுந்தது. கல்லூரி வளாகத்திலேயே மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-30 22:51 GMT

ஆத்தூர்:

கல்லூரி பேராசிரியர்

ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் வடசென்னிமலை அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பேராசிரியராக கெங்கவல்லி பகுதியை சேர்ந்த ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர், அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு செல்போனில் வாட்ஸ் அப் மூலம் பாடங்களுக்கு சந்தேகங்கள் சொல்லி கொடுத்து வந்துள்ளார். அப்போது மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக தெரிகிறது.

கல்லூரி வளாகத்தில் தாக்குதல்

இதனை அறிந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டனர். கல்லூரி வளாகத்தில் நின்ற பேராசிரியருக்கு தர்ம- அடி கொடுத்தனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் சித்ரா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர், மாணவர்களிடம், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பிறகு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்