பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட, மாணவிகளே அதிக தேர்ச்சி

பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட, மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.;

Update:2022-06-21 02:44 IST

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மாணவர்களை விட, மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களை விட, மாணவிகள் 0.86 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களை விட, மாணவிகள் 2.02 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளிகளில் கண்பார்வை குறைபாடுடையவர்கள் 3 பேரும், உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் 4 பேரும், இதர வகை மாற்றத்திறனாளிகள் 5 பேரும் தேர்ச்சி பெற்றனர். காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் 5 தேர்வு எழுதியதில், 4 பேர் தேர்ச்சி பெற்றனர்.

100-க்கு 100 மதிப்பெண் 

பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்பியல் பாடத்தில் 11 பேரும், வேதியியல் பாடத்தில் 9 பேரும், உயிரியியல் பாடத்தில் 21 பேரும், கணிதம் பாடத்தில் 22 பேரும், வணிகவியல் பாடத்தில் 9 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 11 பேரும், பொருளியல் பாடத்தில் 5 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 17 பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 11 பேரும், வணிக கணிதம் பாடத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு 29 பேர் தான் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்திருந்த நிலையில் இந்த ஆண்டு 79 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்