இந்திய மாணவர் சங்கத்தினர் மவுன போராட்டம்

Update: 2023-07-24 19:00 GMT

மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்து நேற்று நாமக்கல்லில் மகாத்மா காந்தி சிலை முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் மவுன போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நானிதா, மாவட்ட குழு உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது நிஷார், மாவட்ட குழு உறுப்பினர்கள் சூர்யா, குட்டியப்பன், கிருபா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்மணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்